/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
5ம் தேதி பள்ளிகள் திறப்பு துாய்மைப்படுத்த உத்தரவு
/
5ம் தேதி பள்ளிகள் திறப்பு துாய்மைப்படுத்த உத்தரவு
5ம் தேதி பள்ளிகள் திறப்பு துாய்மைப்படுத்த உத்தரவு
5ம் தேதி பள்ளிகள் திறப்பு துாய்மைப்படுத்த உத்தரவு
ADDED : ஜன 02, 2026 05:41 AM
திருப்பூர்: 'வரும், 5ம் தேதி பள்ளிகள் திறப்புக்கு வகுப்பறை, வளாகங்களை துாய்மைப்படுத்தி தயார்படுத்த வேண்டும்,' என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
டிச. 10ல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு துவங்கியது. தேர்வுகள், 23ம் தேதியுடன் முடிந்து, கடந்த, டிச. 24 முதல் ஜன. 4ம் தேதி வரை, 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், வரும், 5ம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க, 1.10 லட்சம் புத்தகங்கள் சென்னையில் இருந்து தருவிக்கப்பட்டு, வட்டார கல்வி அலுவலர் வாயிலாக, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி திறப்புக்கு மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால், இன்றும், நாளையும் பள்ளி வகுப்பறை, வளாகங்களை மாநகராட்சி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் துாய்மைப்படுத்த வேண்டும். தேவையிருப்பின் கழிப்பிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து, புதியதாக குடிநீர் நிரப்ப வேண்டும் என மாவட்ட கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

