sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 5ம் தேதி பள்ளிகள் திறப்பு; துாய்மைப்படுத்த உத்தரவு

/

 5ம் தேதி பள்ளிகள் திறப்பு; துாய்மைப்படுத்த உத்தரவு

 5ம் தேதி பள்ளிகள் திறப்பு; துாய்மைப்படுத்த உத்தரவு

 5ம் தேதி பள்ளிகள் திறப்பு; துாய்மைப்படுத்த உத்தரவு


ADDED : ஜன 03, 2026 05:54 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: 'வரும், 5ம் தேதி பள்ளிகள் திறப்புக்கு வகுப்பறை, வளாகங்களை துாய்மைப்படுத்தி தயார்படுத்த வேண்டும்,' என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

டிச. 10ல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு துவங்கியது. தேர்வுகள், 23ம் தேதியுடன் முடிந்து, கடந்த, டிச. 24 முதல் ஜன. 4ம் தேதி வரை, 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், வரும், 5ம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க, 1.10 லட்சம் புத்தகங்கள் சென்னையில் இருந்து தருவிக்கப்பட்டு, வட்டார கல்வி அலுவலர் வாயிலாக, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறப்புக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால், பள்ளி வகுப்பறை, வளாகங்களை மாநகராட்சி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் துாய்மைப்படுத்த வேண்டும். தேவையிருப்பின் கழிப்பிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து, புதியதாக குடிநீர் நிரப்ப வேண்டும் என மாவட்ட கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us