அறிவியல் மாநாடு துவக்கம் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
அறிவியல் மாநாடு துவக்கம் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
UPDATED : நவ 28, 2026 06:20 PM
ADDED : நவ 28, 2026 06:20 PM
திருப்பூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு, திருப்பூர் அருகே விஜயமங்கலம் சசூரி பொறியியல் கல்லுாரியில் துவங்கியது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநாட்டின் மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கவுரி சங்கர் வரவேற்றார். மத்திய பார்வையாளராக முதுநிலை ஆராய்ச்சியாளர் சங்கர், அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் முகமது பாதுஷா, மாநில ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, கல்லுாரி முதல்வர் கிருபா சங்கர், இளங்கோ மற்றும் பேராசிரியை மோகனா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சிகளை, பாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் தங்களது வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மட்டும், 14 குழுக்கள் பங்கேற்றுள்ளன.
மாநாட்டின் ஒரு பகுதியாக அறிவியல் சார்ந்த கருத்தரங்குகள், விஞ்ஞானிகளுடனான மாணவர்களின் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இம்மாநாடு இன்று நிறைவடைகிறது.
