/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவியல் கண்காட்சி குட்டீஸ் அசத்தல்
/
அறிவியல் கண்காட்சி குட்டீஸ் அசத்தல்
ADDED : அக் 25, 2024 10:32 PM

திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, மாஸ்கோ நகர் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வடிவு வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளில், குழந்தைகள், தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். கண்காட்சி அரங்குக்கு வந்த பெற்றோரை பள்ளி ஆசிரியர் உருவாக்கிய இரு 'மாணவர் ரோபோக்கள்' வரவேற்றன.
'செல்பி பாயின்ட்' உருவாக்கப்பட்டிருந்தது. வடக்கு வட்டார கல்வி அலுவலர் சின்னக்கண்ணு, 28வது வார்டு கவுன்சிலர் சேகர் ஆகியோர் குழந்தைகளின் அறிவியல் படைப்பு, அரங்குகளை பார்வையிட்டு, பாராட்டு தெரிவித்தனர். பாலமுருகன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி, பள்ளி ஆசிரியர் ராஜ்குமார், தேவாங்கபுரம் பள்ளி ஆசிரியர் ஜெயாபொன்ராணி மற்றும் பலர் பங்கேற்றனர்.