sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அறிவியல் உயர்ந்தது கலைப்பிரிவு குறைந்தது 

/

அறிவியல் உயர்ந்தது கலைப்பிரிவு குறைந்தது 

அறிவியல் உயர்ந்தது கலைப்பிரிவு குறைந்தது 

அறிவியல் உயர்ந்தது கலைப்பிரிவு குறைந்தது 


ADDED : மே 09, 2025 11:56 PM

Google News

ADDED : மே 09, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: கடந்த, 2024ல் அதிகபட்சமாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில், 654 பேர் சென்டம் பெற்றனர்.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு, 713 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு கணிதத்தில், 157 பேரும், இயற்பியலில், 27 பேரும், வேதியியலில், 23 பேரும், உயிரியலில் ஆறு பேர் சென்டம் பெற்றனர்; நடப்பாண்டு இந்நான்கு பாடங்களில் சென்டம் உயர்ந்துள்ளது. அதன்படி, கணிதம், 183, இயற்பியல், 48, வேதியியல், 107, உயிரியலில், 15 பேர் சென்டம் பெற்றுள்ளனர்.

கடந்த முறை புள்ளியியல், நான்கு பேர் நுாற்றுக்கு நுாறு பேர் பெற்றனர். இம்முறை யாரும் பெறவில்லை. கடந்தமுறை விலங்கியலில் யாரும் சென்டம் பெறாமல் இருந்தனர்; இம்முறை ஒருவர் பெற்றுள்ளார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில், 340 ஆக இருந்த சென்டம், 467 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்த கலைப்பிரிவுகள்

பொருளியல் பாடத்தில் கடந்தாண்டு, 313 பேர் சென்டம் பெற்றனர்; இம்முறை, 67 பேர் மட்டுமே சென்டம் பெற்றுள்ளனர். வணிகவியலில், 591 ஆக இருந்த சென்டம், 120 ஆக குறைந்துள்ளது; கணக்குபதிவியலில் 203 இருந்த சென்டம், 118 ஆக குறைந்துள்ளது.

கடந்த முறை தமிழில் இருவரும், ஆங்கிலத்தில், மூன்று பேரும் சென்டம் பெற்றிருந்தனர். இம்முறை தமிழில், இருவரும், ஆங்கிலத்தில், ஆறு பேரும் சென்டம் பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us