தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அறிவியல் இயக்கம் கைகோர்க்க தயார்

 அறிவியல் இயக்கம் கைகோர்க்க தயார்

 அறிவியல் இயக்கம் கைகோர்க்க தயார்


ADDED : ஜன 15, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 06:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி குப்பை பிரச்னைக்கு, அறிவியல் ரீதியாக ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கூறியுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு, வெள்ளியங்காட்டில் நடந்தது. மாநில செயலாளர் தியாகராஜன், துவக்கிவைத்தார். 'அறிவியலை அறிவோம்; அறிவியலால் இணைவோம்' என்ற தலைப்பில் மாநில செயலாளர் ராமமூர்த்தி பேசினார்.

அறிவியல் இயக்கத்துக்கு, உறுதுணையாக இருந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் புரவலர் களுக்கு நினைவு பரிசுகளை, மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

புதிய மாவட்ட தலைவராக கிருஷ்ணமூர்த்தி, செயலாளராக திலக், பொருளாளராக ராணி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில கருத்தாளர் வீரையா, 'மந்திரமா... தந்திரமா' என்ற நிகழ்ச்சியை நடத்தினார். மாணவர்களின் நாடகம், நடனம், சிலம்பம் மற்றும் யோக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

திருப்பூரில் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இங்குள்ள அனைத்து நுண் உரமாக்கல் மையங்களையும் செயல்படுத்தவும், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதை மக்கள் மத்தியில் பழக்கப்படுத்தவும் நடவடிக்கை தேவை.

கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள், தங்கள் இடத்திலேயே மறுசுழற்சி அல்லது மறுபயன்பாடுக்குரிய பொருளாக மாற்றி, வளமாக மாற்ற வேண்டும்; இயற்கை எரிவாயு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இதற்கு உதவியாக இருக்கும்.

இத்தகைய பணிக்கு, அறிவியல் ரீதியாக ஒத்துழைப்பு வழங்க, அறிவியல் இயக்கம் தயாராக உள்ளது.

திருப்பூரில், அறிவியல் உபகரணங்கள் கொண்ட 'ஸ்டெம்' பூங்கா அருங்காட்சியகம் திறக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில துணைத் தலைவர் மஹபுநிஷா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us