அறிவியல் செய்முறை பயிற்சி தனித்தேர்வர் பதிவு செய்யலாம்
அறிவியல் செய்முறை பயிற்சி தனித்தேர்வர் பதிவு செய்யலாம்
ADDED : செப் 14, 2026 09:01 PM
திருப்பூர், செப். 15–
நடப்பு கல்வியாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன.
முதன்முறை அனைத்துப் பாடங்களையும் எழுதும் நேரடித் தனித்தேர்வர்களும், 2012ம் ஆண்டுக்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். இன்று முதல் இம்மாதம், 30 ம் தேதி வரை திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவல கத்தில், 125 ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பவர் கல்வி அலுவலரால் ஒதுக்கப்படும் பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில், தேர்வர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். 80 சதவீத வருகைப் பதிவு பெற்றவர்கள் மட்டுமே இறுதி செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர், என, மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.
