ADDED : ஏப் 08, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: சட்டசபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் களுக்கு ஆதரவு தெரிவித்து செக்யூரிட்டிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு செக்யூரிட்டி தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருப்பூரில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொது செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் துரை பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் சங்கத்தின் ஆதரவு குறித்து விவாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வெற்றிக்குப் பணியாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
