ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 09:06 PM
திருப்பூர்: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி, ஓட்டு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் நடந்தது.
எல்.ஆர்.ஜி. கல்லுாரி வளாகத்தில் ஓட்டு எண்ணும் மையம் அமைய உள்ளது. கமிஷனர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள், ஓட்டு இயந்திரங்கள் மற்றும் ஓட்டு எண்ணும் மையத்துக்கான பாதுகாப்பு, அனுமதியற்ற நபர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல், கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தேர்தல் காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
