/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாநல்லுார் குண்டம் திருவிழாவில் பக்தர்களுக்கு பாதுகாப்பு! அனைத்து துறையினருடன் ஆலோசனை
/
பெருமாநல்லுார் குண்டம் திருவிழாவில் பக்தர்களுக்கு பாதுகாப்பு! அனைத்து துறையினருடன் ஆலோசனை
பெருமாநல்லுார் குண்டம் திருவிழாவில் பக்தர்களுக்கு பாதுகாப்பு! அனைத்து துறையினருடன் ஆலோசனை
பெருமாநல்லுார் குண்டம் திருவிழாவில் பக்தர்களுக்கு பாதுகாப்பு! அனைத்து துறையினருடன் ஆலோசனை
ADDED : மார் 27, 2025 12:33 AM

அவிநாசி : கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழாவை பாதுகாப்புடனும், பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்தும் நடத்த வேண்டுமென, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வரும் ஏப்., 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடர்பான பாதுகாப்பு ஒருங்கிணைப்பு ஆலோசனைக்கூட்டம், அவிநாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சந்திரசேகர் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில், குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில், பொங்கல் வைக்கும் பக்தர்களுக்கு, அதிகமான இடங்களில் தண்ணீர் கிடைக்கும் வகையில் பைப்லைன் அமைக்கவும், பக்தர்களின் தாகம் தணிக்க சுத்தமான குடிநீர் தொட்டி அமைக்கவும், கோவில் வளாகம் மற்றும் சுற்று பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு தெளித்து துாய்மை செய்யவும் ஊராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுதல், கோவில் முன் பக்தர்கள் நிற்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல், திருப்பூர் ரோடு, புவனம் தியேட்டர் முன்பு தென்புறப் பகுதியிலும், ஈரோடு ரோட்டில் அம்மன் மஹால் முன், கோவை ரோட்டில் டாலர் அபார்ட்மென்ட் திருமண மண்டபம் அருகில், கோபி வழியாக வரும் வாகனங்கள் எம்.எல்.ஆர் மஹால் அருகிலும் பார்க்கிங் செய்ய வேண்டிய இடங்களாக மாற்ற பெருமாநல்லுார் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
குடிநீர் வசதி, கூடுதலாக தண்ணீர் லாரி மூலம் ஏற்பாடு செய்யவும், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யவும், அதிகமான தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை அமைக்கவும், பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளான மஞ்சள் நீர் கிணறு, குண்டம் க்யூ லைன், கலை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.