/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுத்தேர்வு பணிகள் தீவிரம்; வினாத்தாள் அறைக்கு பாதுகாப்பு
/
பொதுத்தேர்வு பணிகள் தீவிரம்; வினாத்தாள் அறைக்கு பாதுகாப்பு
பொதுத்தேர்வு பணிகள் தீவிரம்; வினாத்தாள் அறைக்கு பாதுகாப்பு
பொதுத்தேர்வு பணிகள் தீவிரம்; வினாத்தாள் அறைக்கு பாதுகாப்பு
ADDED : பிப் 27, 2024 11:16 PM

உடுமலை;போலீஸ் பாதுகாப்புடன், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டுக்கோப்பு மையத்தில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வு வினாத்தாள்களை, பாதுகாப்புடன் கல்வித்துறை அலுவலகத்திலிருந்து கொண்டு வந்து, பள்ளிகளுக்கு வழங்க, கட்டுக்கோப்பு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள பள்ளிகளுக்கு, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வினாத்தாள் கட்டுக்கோப்பு மையமாக உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், உடுமலை கோட்டத்தில் 18 மையங்களில் நடக்கிறது.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1ம் தேதியும், பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 4ம் தேதியும் துவங்குகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்து மையங்களிலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
தேர்வுக்கான விடைத்தாள்களில், மாணவர்களின் 'டாப்சீட்', இணைக்கும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள், திருப்பூரிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன், கட்டுக்கோப்பு மையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தவிர, பள்ளி ஆசிரியர் ஒருவரும் மைய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடப்பாண்டில், உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளுக்கு, வினாத்தாள் எடுத்துச்செல்வதற்கும் விடைத்தாள்கள் பெறுவதற்கும் 5 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வின் போது, உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் அனுப்பப்படுகின்றன.

