/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய விலையில் விதை இருப்பு: வாங்கி பயன்படுத்த அழைப்பு
/
மானிய விலையில் விதை இருப்பு: வாங்கி பயன்படுத்த அழைப்பு
மானிய விலையில் விதை இருப்பு: வாங்கி பயன்படுத்த அழைப்பு
மானிய விலையில் விதை இருப்பு: வாங்கி பயன்படுத்த அழைப்பு
ADDED : ஆக 01, 2025 07:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், ஆடிப்பட்டத்துக்கு தேவையான சான்றுபெற்ற விதைகள், இடுபொருட்கள் மானிய விலையில் விற்பனைக்கு உள்ளது.
சோளம், கம்பு, உளுந்து, வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம், நுண்ணூட்டச்சத்து, 'டீ விரிடி', சூடோமோனஸ், திரவ ஜிங்க்சல்பேட் உரம், ஜிப்சம், திரவ ரைசோபியம் ஆகியவை மானிய விலையில் விற்பனை செய்ய இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் விவசாயிகள் வாங்கி பயன்படுத்தலாம். மேலும் விபரங்களுக்கு, அமல்ராஜ் வேளாண் உதவி அலுவலரை, 97512 93606 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை உடுமலை வட்டார வேளாண்துறையினர் தெரிவித்தனர்.