/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் ஆபீசில் கருகும் நாற்றுகள்
/
வேளாண் ஆபீசில் கருகும் நாற்றுகள்
ADDED : ஜன 23, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் அருகே, திருச்சி ரோட்டில், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது. விவசாயிகள், பொதுமக்களுக்கு வழங்க கொய்யா செடி நாற்றுகள், வேளாண் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக பராமரிக்கப்பட்டு வந்தன.
போதிய பராமரிப்புகள் இன்றியும், அலுவலர்கள் ஆர்வம் காட்டாததாலும், கொய்யா நாற்றுகள் அனைத்தும், காய்ந்து கருகி வீணாகி வருகின்றன. நாற்றுகளாக உருவாக்கி, பல நாட்கள் இவற்றை பராமரித்து வளர்த்து, இவ்வாறு வீணடிக்கப்பட்டதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அரசுத் திட்டங்களை வீணடிக்காமல், விவசாயிகள் பொதுமக்களுக்கு இவை முறையாக சென்று சேர அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.