/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள்
/
விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள்
ADDED : ஆக 28, 2025 10:58 PM
உடுமலை, ; உடுமலை வேளாண் துறை அலுவலகம், குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகளுக்கு தேவையான தானிய விதைகள் மற்றும் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உடுமலை பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
உடுமலை வேளாண் துறை அலுவலகத்தில், விவசாயிகளுக்கு சாகுபடிக்கு தேவையான, கொண்டைக்கடலை, உளுந்து, வெள்ளைச்சோளம், கம்பு, வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் ஆகிய சான்று பெற்ற , தரமான விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல், பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்டசத்து உரங்கள், டீ விரிடி, சூடோமோனாஸ், திரவ ஜிங்க் சல்பேட் உரம், ஜிப்சம், திரவ ரைசோபியம் ஆகியவையும் மானிய விலையில் வழங்கப்படுகிறது, என வேளாண்துறையினர் தெரிவித்தனர். உடுமலை பகுதி விவசாயிகள் இதை வாங்கி பயன்பெறலாம்.