/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டைக்கடலை விளைநிலங்களில் சீமைக்கருவேல் மரங்கள் ஆக்கிரமிப்பு
/
கொண்டைக்கடலை விளைநிலங்களில் சீமைக்கருவேல் மரங்கள் ஆக்கிரமிப்பு
கொண்டைக்கடலை விளைநிலங்களில் சீமைக்கருவேல் மரங்கள் ஆக்கிரமிப்பு
கொண்டைக்கடலை விளைநிலங்களில் சீமைக்கருவேல் மரங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : டிச 08, 2025 05:32 AM

பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியத்தின் கணிசமான பகுதிகள் கரிசல் மண் பூமியாகும்.
இது கொண்டைக்கடலை சாகுபடிக்கு ஏற்றது. கார்த்திகை மாதத்தில் விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடி செய்வர். தை மாதத்தில் அறுவடைக்கு வந்து விடும். கார்த்திகைக்கு பின் மழை குறைய துவங்கும்.
மண்ணில் உள்ள ஈரப்பதம் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருப்பது, கீழே விழும் பனித்துளியின் ஈரத்தை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்ளும் தன்மை போன்ற காரணங்களால் கொண்டைக்கடலைக்கு தண்ணீர் பிரச்னை இருக்காது.
பல ஆண்டுகளாக விவசாயிகள் நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் கொண்டைக்கடலை சாகுபடி செய்து வந்தனர்.
இளைய தலைமுறையினர் விவசாயத்தை விட்டு வெளியேறுவது, ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் விளை நிலங்களின் மதிப்பு உயர்ந்தது போன்ற காரணங்களால் நிலங்கள் தரிசாக விடப்பட்டன.
போதிய பராமரிப்பின்றி கிடப்பதால் பல ஏக்கர் விவசாய நிலங்களில் சீமைக்கருவேல் மரங்கள் வளர்ந்து அப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. மாவட்டத்தின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவு இப்பகுதியில் விளைந்த கொண்டைக்கடலை விவசாயம் மறைந்து வருகிறது.

