ADDED : ஜன 09, 2026 06:10 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, 77வாகனங்கள் வரும் 20ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள, ஒரு லாரி, எட்டு நான்கு சக்கர வாகனம், ஒரு மூன்று சக்கர வாகனம், 67 டூவீலர் என, மொத்தம், 77, வாகனங்கள் வரும் 20ம் தேதி காலை, 10:00 மணிக்கு பொது ஏலம் நடக்கிறது. காங்கயம் ரோடு, நல்லிகவுண்டன் நகரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடக்கிறது. ஏலம் விடும் வாகனங்களை 18 மற்றும் 19ம் தேதிகளில் காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை நேரில் பார்வையிடலாம்.
பொது ஏலத்தில் பங்கேற்கும் நபர்கள் ஏலத் தேதியன்று காலை, 10:00 மணிக்குள் முன் வைப்பு தொகை, 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக செலுத்தி டோக்கன் பெற்று கொண்டு பொது ஏலத்தில் பங்கேற்கலாம். முன் வைப்பு தொகை செலுத்தும் நபர்கள் மட்டும் பொது ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகை, அதற்கு உண்டான ஜி.எஸ்.டி., வரி முழுதையும் ரொக்கமாக செலுத்த வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு எஸ்.பி., அலுவலகத்தை நேரிலோ அல்லது 94981 - 77333, 94982 - 00147 தொடர்பு கொள்ளலாம், என போலீசார் தெரிவித்துள்ளனர்.
