ADDED : பிப் 17, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்;வெள்ளகோவில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சுகாதாரத்துறை அலுவலர்கள் செல்வராஜ், ராஜேந்திரன், கதிரவன், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு அலுவலர் பிரவீன்குமார், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பாலமுருகன், மாவட்ட குழந்தைகள் உதவி மைய அலுவலர் ரதிபரத், போலீஸ் நவநீதன் ஆகியோர் அடங்கிய குழுவினர், கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்குள்ள கடைகளில் இருந்து, 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட், 4 கிலோ தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. 7,000 ரூபாய் மதிப்பில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.
பொது இடங்கள், பள்ளிகள் அருகில் புகையிலைப் பொருள் விற்றவர்களுக்கு 2,700 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.