தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செயற்கை அவயம் வழங்க தேர்வு முகாம்

 செயற்கை அவயம் வழங்க தேர்வு முகாம்

 செயற்கை அவயம் வழங்க தேர்வு முகாம்


ADDED : பிப் 15, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர், பி.என்.ரோடு- பாண்டியன் நகர் சமூக நலக்கூடத்தில், செயற்கை அவயங்கள் தேவைப்படுவோர்க்கு தேர்வு முகாம் நேற்று நடந்தது.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வாயிலாக செயற்கை அவயங்கள் தேவைப்படும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளர் நல அலுவலர் சந்திரமோகன் தலைமை வகித்தார். மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் அதிகாரிகள், 340க்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர்.

இதில், உபகரணங்கள் பெற 272 பேர் தேர்வாகினர். விரைவில் உபகரணங்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில், சக் ஷம் மாவட்டத் துணைத்தலைவர் ரத்தினசாமி, சேவை மைய பொறுப்பாளர் ஞானசேகரன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர். பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் கோவிந்தராஜ் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us