/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐயப்பன் கோவில் நிர்வாகிகள் தேர்வு
/
ஐயப்பன் கோவில் நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 30, 2024 05:37 AM
திருப்பூர் : திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும், ஸ்ரீ ஐயப்ப பக்த ஜனசங்க அமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக இச்சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினர். இந்நிலையில், நீண்ட காலத்துக்குப் பின் தற்போது தேர்தல் நடத்தப்பட்டது.
சொக்கலிங்கம் தேர்தல் அலுவலராகச் செயல்பட்டார். இதில், இரு அணிகள் பங்கேற்ற நிர்வாக குழு பதவிகளுக்கான சங்க உறுப்பினர்கள் ஓட்டளித்து தேர்வு செய்தனர். இத்தேர்தலில் 241 உறுப்பினர்களில் 207 பேர் ஓட்டளித்தனர்.
இத்தேர்தலில், சங்க தலைவராக நாச்சிமுத்து; துணை தலைவராக மோகன், செயலாளர் மணி; துணை செயலாளர் சிவகுமார், பொருளாளர் முருகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் 28 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிர்வாக குழுவினர் மூன்றாண்டுக்கு இந்த பொறுப்பில் பணியாற்றுவர்.

