ADDED : நவ 18, 2024 06:30 AM
பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் 'மகிழ் முற்றம்' என்ற மாணவர் குழு ஏற்படுத்தப்படுகிறது.
அம்மாபாளையம் நடுநிலைப் பள்ளியில் 'மகிழ் முற்றம்' பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு அமைப்பின் பதவி ஏற்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் ராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியை கவிதா வரவேற்றார். ஆசிரியர் முத்துக்குமார் பேசினார். ஐந்து குழுக்களின் ஒட்டு மொத்த பொறுப்பாசிரியராக ஆசிரியை ஹெலன் செல்வியும், மாணவர் தலைவராக ஹரி மிதிலேஷ், மாணவி தலைவியாக தனிஷ்காவும் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர் குழு தலைவர்களின் மதிப்பீட்டு பலகையை பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி திறந்து வைத்தார். பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் விஜயலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாஸ்கர சேதுபதி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.