/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய் சாரதா பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி
/
ஜெய் சாரதா பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி
ADDED : ஜன 09, 2024 12:42 AM

திருப்பூர்;திருப்பூர், 15 வேலம்பாளையம், ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'அச்சம் தவிர்' எனும் தலைப்பில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடந்தது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் நிக்கான்ஸ்வேலுச்சாமி தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் கீர்த்திகாவாணிசதீஷ் வரவேற்றார்.
தன்னம்பிக்கை பேச்சாளர், பேராசிரியர் ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்கேற்று, 'அறியாமை எனும் இருளை அகற்றும் அகல் விளக்காக கல்வி விளங்குகின்றது. நேர்மறையான மாற்றத்தை தந்து, அச்சத்தை அகற்றுவது கல்வி,' என, அறிவுரை வழங்கினார்.
கலந்துரையாடலில் மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பள்ளி முதல்வர் மணிமலர் நன்றி கூறினார். பள்ளியின் பொருளாளர் சுருதிஹரீஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.