ஒவ்வொருவரும் வீரம், தீரம், துணிவு, கம்பீரம், வழிகாட்டும் திறன், அச்சமின்மை உள்ளிட்ட குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது பாரதியின் இந்த 'ஆத்தி சூடி'.
கடந்த 2022ல் திருப்பூர், கே.பி.என்., காலனியில் உள்ள நகைக்கடையொன்றில் 3.25 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, 14.5 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. அப்போதைய கமிஷனர் பாபு உத்தரவின் பேரில், அனில்குமார், வரதராஜன் உள்ளிட்ட, ஐந்து உதவி கமிஷனர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் தப்பி சென்றதையும், சென்னையில் இறங்கியதையும் உறுதி செய்தனர்.
சென்னை வழியாக பீஹார் செல்லக்கூடிய 'பாக்மதி எக்ஸ்பிரஸ்' ரயிலில், நால்வரும் தப்பியது தெரிந்தது. மகாராஷ்டிரா மாநிலம், பல்லார்ஷா ஸ்டேஷனில், ஆர்.பி.எப்., போலீசார் உஷார்படுத்தப்பட்டு, ரயிலில், கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்துடன் இருந்த, நான்கு பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர்.
திருப்பூர் தனிப்படை போலீசாரின் வீரத்தையும் தீரத்தையும் உணர்த்துவதாக இந்த சம்பவம் இருந்தது.

