/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுய வேலைவாய்ப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்
/
சுய வேலைவாய்ப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜன 21, 2025 11:58 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட தொழில்மையம் சார்பில், சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம், பொங்கலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
இன்று காலை, 11:00 முதல் மதியம், ஒரு மணி வரை நடைபெறும் முகாமில், சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. தொழில்முனைவோர் தங்கள் நிறுவனம் தொடர்பான ஆவணங்கள், சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களில் விண்ணப்பிக்க, போட்டோ, கல்விச்சான்று, ரேசன் கார்டு, ஆதார், வாக்காளர் அட்டை, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், இயந்திரங்களுக்கான விலைப்புள்ளி விவரம், பாங்க் பாஸ்புக் ஆகியவற்றுடன் பங்கேற்கவேண்டும். தொழில் துவங்க ஆர்வமுள்ள, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அரசின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற, விழிப்புணர்வு முகாமில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.