/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு தன்னாற்றல் மேம்பாட்டு பயிற்சி
/
மாணவர்களுக்கு தன்னாற்றல் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜூலை 01, 2025 10:11 PM

உடுமலை; கிருஷ்ணாபுரம் ஊர்ப்புற நுாலகத்தின், நுாலகர் வாசகர் வட்டம் சார்பில் 'உன்னை அறிந்தால் வெற்றி நிச்சயம்' என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களுக்கு தன்னாற்றல் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. பயிற்சியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நுாலக வாசகர் வட்ட தலைவர் தேவராஜ் வரவேற்றார். ஊராட்சி செயலாளர் ஜெயபிரகாசம் முன்னிலை வகித்தார்.
அதில் தோல்வியை எதிர்கொள்வது, நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது, தேர்வில் மதிப்பெண் பெறுவது குறித்தும் தன்னம்பிக்கை பயிற்சியாளர் ரவிகாந்தன் பேசினார். தொடர்ந்து மொபைல் பயன்பாட்டை குறைப்பதற்கும், புத்தகம் வாசிப்பதற்கான சிறந்த ஆலோசனைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. நுாலகர் லட்சுமணசாமி நன்றி தெரிவித்தார்.