sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சோலார் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு! நியூ திருப்பூர் தொழில் பூங்கா அசத்தல்

/

சோலார் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு! நியூ திருப்பூர் தொழில் பூங்கா அசத்தல்

சோலார் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு! நியூ திருப்பூர் தொழில் பூங்கா அசத்தல்

சோலார் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு! நியூ திருப்பூர் தொழில் பூங்கா அசத்தல்


UPDATED : மார் 17, 2026 10:20 AM

ADDED : மார் 17, 2026 05:49 AM

Google News

UPDATED : மார் 17, 2026 10:20 AM ADDED : மார் 17, 2026 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: இந்தியாவின் முதல் தொழிற்பூங்கா என்ற பெருமை பெற்ற, நேதாஜி அப்பேரல் பார்க், சோலார் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் தன்னிறைவு பெற்ற தொழிற்பூங்காவாகவும் முன்னேறியுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக, திருப்பூரில் நேதாஜி அப்பேரல் பார்க் அமைக்கப்பட்டது. ஜவுளித்துறை சார்பில், பெருமாநல்லுார் அருகே புதிய திருப்பூர் என்ற பகுதி அமைக்கப்பட்டது. 166 ஏக்கர் பரப்பளவில், 53க்கும் அதிகமான தொழிற் கூடங்களுடன், பிரமாண்டமான தொழிற்பூங்கா அமைக்கப்பட்டது. கடந்த, 2003ம் ஆண்டு முதல், நேதாஜி அப்பேரல் பார்க் வளாகத்தில், ஏற்றுமதி நிறுவனங்கள், தங்களது கிளையை நிறுவி, பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, வளாகத்தில் உள்ள, 500க்கும் அதிகமான நிறுவனங்களில், 15 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து, திருப்பூக்கு வேலைக்கு வந்து சென்ற நிலையில், பெருமாநல்லுார் அருகே அமைந்த பூங்கா, அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு வாழ்வாதாரமாக மாறியிருக்கிறது.

வளாகத்திலேயே, தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி் அளிக்கும் மையம், கூட்டரங்கு, குடிநீர், வடிகால் வசதியுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, மின்சாரத்தை சார்ந்து இயங்காமல், முழுவதும் சோலார் கட்டமைப்பு வசதியுடன் இயங்கி வருகிறது.

பின்னலாடை நிறுவனங்கள், முழு வேகத்தில் உற்பத்தி பணிகளை செய்து வந்தாலும், அதற்கு தேவையான மின்சாரத்தை, சோலார் கட்டமைப்பின் வாயிலாக பெற்று தன்னிறைவு அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட முன்மாதிரி பார்க் என்ற பெருமை பெற்ற, நேதாஜி அப்பேரல் பார்க், சோலார் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிலும் தன்னிறைவு பெற்ற தொழிற்பூங்காவாக முன்னேறியுள்ளது.

நேதாஜி அப்பேரல் பூங்காவின் நிர்வாகக்குழு தலைவர் ராமு தலைமையிலான குழுவினர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் இணைந்து சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, 3.4 மெகா வாட் திறனுள்ள சோலார் பேனல்கள் அமைத்து, முழுமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

5 லட்சம் யூனிட் மின்சாரம்

நேதாஜி அப்பேரல் பார்க்கில், கே.எம்., நிட்வேர் உள்ளிட்ட நிறுவனங்கள், முழுவதும் சோலார் மூலமாக இயங்கி வருகின்றன. அரசுத்துறை உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் வருகை தரும் போது, நேதாஜி பார்க் வந்து தொழிற்சாலைகளை பார்வையிடுகின்றனர். அந்த அளவுக்கு நேர்த்தியான கட்டமைப்புடன் இயங்கி வருகிறது. குடிநீர், நிலத்தடி நீர் சேமிப்பு வசதிகளும் உள்ளன. சோலார் வாயிலாக, மாதம், ஐந்து லட்சம் யூனிட் அளவுக்கு சோலார் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய திருப்பூர் பகுதியில் இயங்கும் இப்பூங்கா, நமது நாட்டுக்கே முன்னுதாரணமான பூங்காவாக விளங்குவதாக, மத்திய அமைச்சர்கள் பாராட்டியுள்ளனர். - நேதாஜி அப்பேரல் பார்க் நிர்வாகக்குழுவினர்








      Dinamalar
      Follow us