ADDED : பிப் 18, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் 'இன்றைய உலகில் வர்த்தகத்தின் நிலைப்பாடு' என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் கல்லுாரி முதல்வர் நளதம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக்கல்லுாரி வணிகவியல் துறை பேராசிரியர் ரவீந்திரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இன்றைய வர்த்தகத்தின் நிலைப்பாடு பற்றி சிறப்புரை ஆற்றினார்.
மாணவர் தமிழரசன் நன்றி கறினார்.
வணிகவியல் துறை தலைவர் அருண், சரோஜா, தியாகராஜன், ஷாலினி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.