ADDED : செப் 24, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி அரசு கலை கல்லுாரியில், 'நிமிர்ந்து நில்' மற்றும் இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டு திட்டத்தின் சார்பில், விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
மாணவர்களை தொழில் முனைவோராக உருவாக்கும் சுய தொழில் திறன்களை வளர்க்கும் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெறச் செய்யும் நோக்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், அனைத்து துறை சார்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட திட்ட மேலாளர் பிரபாகரன் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை பாலமுருகன் ஒருங்கிணைத்தார். முன்னதாக, கல்லுாரி முதல்வர் ஹேமலதா (பொறுப்பு) முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் தன்னம்பிக்கை வளர்க்கும் உத்திகள், சுய தொழில் முனைவு வாய்ப்புகள், சொந்த வியாபார யோசனைகள் உருவாக்கும் பயிற்சிகள், மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.