/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரபு வழி கால்நடை வளர்ப்பு வரும் 25ல் கருத்தரங்கம்
/
மரபு வழி கால்நடை வளர்ப்பு வரும் 25ல் கருத்தரங்கம்
ADDED : ஜன 20, 2025 04:37 AM
உடுமலை : வனத்துக்குள் திருப்பூர் - வெற்றி அமைப்பு சார்பில், ரசாயண மருந்துகள் இல்லாமல், மரபு வழி கால்நடை வளர்ப்பில் லாபம் பெறுதல் என்ற தலைப்பில், அவிநாசி சேவூர் ரோடு, கொங்கு கலையரங்கில், வரும், 25ம் தேதி, காலை, 9:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை கருத்தரங்கம் நடக்கிறது.
இக்கருத்தரங்கில், ஆடு, மாடு, கோழி, எருமை, எருது ஆகிய கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவற்றுக்கு உண்டான மரபு வழி தீர்வுகள் குறித்து, கால்நடைப்பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் புண்ணியமூர்த்தி பங்கேற்று விளக்கம் அளிக்க உள்ளனர்.
பங்கேற்க விரும்பம் உள்ள விவசாயிகள், 90470 86666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 22 மற்றும் 23ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள், சிப்பிக்காளான் விதை உற்பத்தி பயிற்சி நடக்கிறது.
விருப்பம் உள்ளவர்கள், 94433 79276; 9894846449 ஆகிய எண்களில், காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம், என திட்ட இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.