/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
40 புதிய அங்கன்வாடிகள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு
/
40 புதிய அங்கன்வாடிகள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு
40 புதிய அங்கன்வாடிகள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு
40 புதிய அங்கன்வாடிகள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு
ADDED : பிப் 12, 2024 11:16 PM
உடுமலை;திருப்பூர் மாவட்டம் முழுவதும் புதிதாக 40 அங்கன்வாடி மையங்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 1,516 அங்கன்வாடி மையங்கள் இருந்தன. இது, கடந்த 2022 - 23ம் ஆண்டில், 1,476 ஆக குறைக்கப்பட்டது.
புள்ளியியல் பிரிவினர் கூறியதாவது: குறைந்தபட்சம் 25 குழந்தைகளுக்கு ஒரு முதன்மை அங்கன்வாடி மையம்; 10 முதல் 15 குழந்தைகளுடன் குறுமையங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகளை கொண்ட மையங்கள், அருகாமை மையங்களுடன், இணைக்கப்பட்டுள்ளன.
அதன்படியே மாவட்டத்தில் 40 மையங்கள் குறைக்கப்பட்டன. தற்போது, 1,303 முதன்மை மையங்கள்; 173 குறுமையங்கள் என, 1,476 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களில், 1.42 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.குறைக்கப்பட்ட மையங்களுக்குபதிலாக, அதிக குழந்தைகளை கொண்ட வேறு பகுதிகளை தேர்வு செய்து புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
அந்தவகையில், மாவட்டம் முழுவதும் புதிதாக 40 மையங்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தால், மாவட்ட மொத்த மையங்களின் எண்ணிக்கை, 1,516 ஆக உயர்ந்துவிடும்.