/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலேஷியாவில் மூத்தோர் தடகளம்; முத்திரை பதித்த திருப்பூர் வீரர்கள்
/
மலேஷியாவில் மூத்தோர் தடகளம்; முத்திரை பதித்த திருப்பூர் வீரர்கள்
மலேஷியாவில் மூத்தோர் தடகளம்; முத்திரை பதித்த திருப்பூர் வீரர்கள்
மலேஷியாவில் மூத்தோர் தடகளம்; முத்திரை பதித்த திருப்பூர் வீரர்கள்
ADDED : அக் 16, 2024 12:24 AM

திருப்பூர் : மலேஷியாவில் நடந்த மூத்தோர் தடகள போட்டியில் திருப்பூர் சேர்ந்த மூத்தோர் பதக்கம் பெற்றனர்.
மலேஷிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில், 36வது சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சமீபத்தில் நடந்தது. இதில், ஆசிய நாடுகளில் இருந்து, 2,000 பேர் பங்கேற்றனர். இதில், திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்த வெட்ரன் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் பொருளாளர் மனோகர், 60 வயது பிரிவில், 1,500 மீ., ஓட்டப்போட்டியில் வெண்கலம், 800 மீ., ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். 55 வயது பெண்கள் பிரிவில், வெட்ரன் ஸ்போர்ட்ஸ் சங்க செயலாளர் திருப்பூரைச் சேர்ந்த சுமதி, குண்டெறிதல் போட்டியில் வெண்கலம், தட்டெறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார்.
மேலும், திருப்பூர் வெட்ரன் ஸ்போர்ட்ஸ் அசோஷியேஷன் சார்பில், 75 வயது பிரிவில் கூடலுர் கிருஷ்ணமூர்த்தி, 3 ஆயிரம் மீ., நடை போட்டியில் வெண்கலம், கோத்தகிரி மணி, 65 வயது பிரிவில், 3 கி.மீ., துார நடை போட்டியில் வெண்கலம் பெற்றனர்.