/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடகளத்தில் 'தளராமல்' சாதித்த மூத்தோர்
/
தடகளத்தில் 'தளராமல்' சாதித்த மூத்தோர்
ADDED : ஜன 01, 2024 12:16 AM

திருப்பூர்;திருச்சி பெல், நேரு ஸ்டேடியத்தில், 38வது மாநில மூத்தோர் தடகள போட்டி நடந்தது. திருப்பூரில் இருந்து, 30 பேர் உட்பட, மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
திருப்பூரை சேர்ந்த, 80 வயது ஞானஹெப்சிபா, 80 வயது, 100 மீ., ஓட்டத்தில் தங்கம், குண்டு மற்றும் வட்டு எறிதல் இரண்டிலும் வெள்ளி; தடகள வீரர் சங்க பொருளாளர் மனோகர், 800 மீ., ஓட்டத்தில் தங்கம், 1,500 மீ., ஓட்டத்தில் வெள்ளி, 5,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார்.
அணி மேலாளர், மணி பப்ளிக் அகாடமியின் அருள் பிரகாஷ், 100 மீ., ஓட்டத்தில் வெள்ளி, 200 மீ., ஓட்டத்தில் வெண்கலம். தாராபுரத்தை சேர்ந்த பிரபு, 100 மீ., ஓட்டத்தில் வெண்கலம். உடற்கல்வி ஆசிரியர் மாரிமுத்து சங்கிலி குண்டு எறிதலில் தங்கம், வட்டு எறிதலில் வெள்ளி, மணி, 100 மீட்டரில் வெண்கலம்.
காஞ்சனா, 5,000 மீ., ஓட்டத்தில் தங்கம், நீளம் தாண்டுதலில் வெள்ளி, 1500 மீ., ஓட்டத்தில் வெள்ளி; காங்கயம்,ஸ்ரீ வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளி முதல்வர் வித்யா ஈட்டி எறிதலில் தங்கம், மும்முறை தாண்டு தலில் வெண்கலம்.
திருப்பூர் வாரியர் கராத்தே ஜூடோ பெண் பயிற்றுனர் லட்சுமி 100 மீட்டரில் வெண்கலம், அமைப்புச் செயலாளர் சுமதி சங்கிலி குண்டு மற்றும் வட்டு மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்றார்.
மாநில தடகள போட்டியில் வெற்றி பெற்ற திருப்பூர் வீரர், வீராங்கனைகளை சங்க ஆலோசகர், துணைத்தலைவர், இணைச் செயலாளர் உள்ளிட்டோர் பாராட்டினர்.