/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் சிறப்பு பஸ்களுக்கு தனி 'ரேக்'
/
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் சிறப்பு பஸ்களுக்கு தனி 'ரேக்'
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் சிறப்பு பஸ்களுக்கு தனி 'ரேக்'
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் சிறப்பு பஸ்களுக்கு தனி 'ரேக்'
ADDED : டிச 12, 2025 06:23 AM

திருப்பூர்: கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் சிறப்பு பஸ்களுக்கென தனி 'ரேக்' ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் மூன்று பஸ் ஸ்டாண்ட்கள் உள்ள போதும், விசேஷ நாட்களில் அதிகளவில் பயணிகளும், பஸ்களும் வந்து செல்வது கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்டுக்கு தான். ஆறு மாதம் முன் திறப்பு விழா கண்ட நிலையில், பஸ்கள் நின்று செல்ல 'ரேக்' ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வாராந்திர சிறப்பு பஸ்கள் மட்டுமின்றி, தென்மாவட்டங்களுக்கு கூடுதலான பஸ்கள் கோவில்வழியில் இருந்து இயக்கப்படுவதால், பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அருகில் முதலிரண்டு 'ரேக்'குகளும், வடக்கு புறத்தில் மூன்று 'ரேக்' வீதம் மொத்தம் ஐந்து 'ரேக்'குகள், சிறப்பு பஸ் என எழுதப்பட்டு, தனியே ஒதுக்கப்பட்டுள்ளது. இது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.