ADDED : மார் 17, 2025 01:44 AM
அவிநாசி; அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இடது கை மணிக்கட்டில் சீழ் பிடித்து அழுகி நிலையில் நீண்ட சடைமுடியுடன் இளைஞர் ஒருவர் சுற்றிக்கொண்டு யாசகம் கேட்டு வந்துள்ளார்.
நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ், உறுப்பினர்கள் சிவகாமி, சந்தோஷ் ஹரிபிரசாத் ஆகியோர் அவருக்கு சிகை அலங்காரம் செய்தனர்.
இடது கை மணிக்கட்டில் சீழ் பிடிக்க காரணமாக இருந்த கயிறு, ரப்பர் பேண்ட் ஆகியவற்றை அறுத்து, புண்ணை சுத்தம் செய்தனர்.
குளிக்க வைத்து புதிய பேன்ட் -சர்ட் அணிவித்து அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டிச் சென்றனர். அங்கு கையில் ஏற்பட்டிருந்த புண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தனது பெயர் வடிவேல்; சொந்த ஊர் நாமக்கல் என்றும் கூறியுள்ளார். காப்பகத்தில் தங்க அவர் மறுத்தார். அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலேயே அவர் விடப்பட்டார்.