ADDED : ஏப் 12, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்: முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த எள் ஏலத்தில் 22 விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் தாங்கள் விளைவித்த, 2,846 கிலோ (40 மூட்டையில்) எள் கொண்டு வந்தனர்.
இதில், ஒரு கிலோ 185.09 - 116.70 ரூபாய் என ஏலம் போனது. சராசரியாக, 163.59 ரூபாய்க்கு விற்றது. இந்த வார ஏலத்தில், மொத்தம், 2,846 கிலோ எள், 4.36 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது.

