ADDED : ஜூன் 08, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளக்கோவில்: முத்துார் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில் நேற்று எள் ஏலம் நடைபெற்றது. முத்துார் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், 21 பேர் கலந்து கொண்டனர்.
மொத்தம், 41 மூட்டைகளில், 3,062 கிலோ எள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அவை அதிகபட்சம், கிலோ 125.05 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 100 ரூபாய்க்கும் ஏலம் போனது. ஏல சராசரி விலை, 117.59 ரூபாய்.
மொத்தம், 3,062 கிலோ எள், 3.46 லட்சம் ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடைபெற்றது.