ADDED : ஜூன் 29, 2026 11:31 PM

திருப்பூர்: சேவாபாரதி தென் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம், திருப்பூர், ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி வளாகத்தில் கடந்த 27, 28ம் தேதிகளில்நடந்தது.
மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். துணை தலைவர் ஸ்ரீதர் மூர்த்தி, மாநில அறங்காவலர் குழு உறுப்பினர் சொர்ணாபாய் ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர். மாநில பொதுச்செயலாளர் இளங்குமார் சம்பத், சேவாபாரதியின் எதிர்கால செயல்திட்டங்கள், சேவை பணிகள் விரிவாக்கம் குறித்து பேசினார்.
கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது; எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய சேவைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டு நாட்கள் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், சேவாபாரதி தென் தமிழ்நாடு மாநில, கோட்ட மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் 178 பேர் பங்கேற்றனர்.
நிறைவு விழாவுக்கு, சேவாபாரதி மாநில துணை தலைவர் எக்ஸ்லான் ராமசாமி தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் ஆறுமுகம், சேவை பணிகளை அனைத்து தரப்பினரிடமும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்.
