ADDED : செப் 07, 2025 10:54 PM

அவிநாசி; சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக்கூடம் சார்பில் ஏழுபடை யாத்திரை என்ற சதங்கையணி விழா நடந்தது.
அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில், அவிநாசி சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக்கூடம் சார்பில் ஏழுபடை யாத்திரை என்ற சதங்கையணி விழா நடந்தது. தலைமை விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் சாமிநாதன் குத்துவிளக்கேற்றி விழா வை துவக்கி வைத்தார்.
திருப்பூர் மேயர் தினேஷ்குமார், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை இசைத்துறை தலைவர் இணை பேராசிரியர் குமார், உதவி பேராசிரியர் மற்றும்நடனத் துறை தலைவர் (ஓய்வு) கிருஷ்ணராஜூ, திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், கோவை ஸ்ரீ சாய் நிருத்யாலயா நடனப்பள்ளி நிறுவனர் லாவண்யாஸ்ரீ உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சுந்தரமூர்த்தி விழா தொகுப்புரை வாசித்தார். சலங்கை நிருத்யாலயாவின் குரு தேவிகா வடிவேல் - நட்டுவாங்கம், திருச்சி கலைக் காவேரி நுண்கலைக்கல்லுாரி வாய்ப்பாட்டு துறை உதவி பேராசிரியர் ராஜேஷ்பாபு - வாய்ப்பாட்டு, பிரேம்குமார் - மிருதங்கம், புவன கிரி ஸ்ரீராம் - வயலின், கார்த்திக் வெங்கடேசன் - மோர்சிங் என ஏழுபடை யாத்திரை சதங்கையணி விழாவிற்கு பங்களிப்பாற்றினர்.
சலங்கை நிருத்யாலயா எஜூகேஷனல் மற்றும் கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட் தாளாளர் வடிவேல் ஒருங்கிணைத்தார்.