/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் வங்கதேசத்தினர் ஏழு பேர் கைது
/
திருப்பூரில் வங்கதேசத்தினர் ஏழு பேர் கைது
ADDED : ஜன 17, 2025 06:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மாஸ்கோ நகரில் செயல்படும் பனியன் நிறுவனத்தில் போலீசார் நடத்திய சோதனையில், அங்கு தங்கி வேலை செய்து வந்த வங்கதேசத்தினர், இம்ரான் ஹூசைன், முகமது நூர்நபி, ரபினி மோண்டல், முகமது ஷாஜகான், முக்தர், முகமது ரபிகுல் இஸ்லாம், முகமது கபீர் ஹூசைன் ஆகிய ஏழு பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்
. இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் அங்கு தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.