/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனித்தேர்வர் விண்ணப்பிக்க ஏழு மையங்கள் அமைப்பு
/
தனித்தேர்வர் விண்ணப்பிக்க ஏழு மையங்கள் அமைப்பு
ADDED : டிச 22, 2025 05:03 AM
திருப்பூர்: வரும், 2026 மார்ச்சில், பத்தாம் வகுப்புக்கும், பிளஸ் 2 வகுப்புக்கும் பொதுத்தேர்வு துவங்கு கிறது.
இத்தேர்வெழுதும் தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய், நஞ்சப்பா, அவிநாசி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி; தாராபுரம், என்.சி.பி., ஆண்கள் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் ஆகிய ஏழு பள்ளிகளில் அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்கள் செயல்படும்.
இம்மையங்களுக்கு ஆதார், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சுய விபரங்கள் ஆகியவற்றுடன் சென்று விண்ணப்பிக்கலாம்.
இன்று (22ம் தேதி) முதல் வரும் ஜன. 7ம் தேதி வரை, காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மேற்கண்ட மையங்களில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேர்வுகள் துறை இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

