/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேவூர் பெருமாள் கோவில் மண்டல பூஜை நிறைவு
/
சேவூர் பெருமாள் கோவில் மண்டல பூஜை நிறைவு
ADDED : டிச 25, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
கோவிலில், கடந்த மாதம், 30ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழாவில் நேற்று காலை மஹா சுதர்சன ஹோமம், ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேகம் ஆகியவை நடந்தது.
அலங்கார பூஜை, சாற்று முறை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

