UPDATED : செப் 09, 2026 09:23 PM
ADDED : செப் 09, 2026 09:11 PM

திருப்பூர்: தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட, 187 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல்மெஷின் வழங்கப்பட்டது.
மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்கள், காது கேளாத, கை, கால் பதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் தையல் மெஷின் வழங்கப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் தகுதியான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல் முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் மற்றும்நேற்று என இரண்டு நாட்கள் நடந்தது.
இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அதிகாரிகள் பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தையல் மெஷின் பயன்படுத்த தகுதியானவர்களா, அவர்களால் பயன்படுத்த முடிகிறதா என ஆய்வு செய்தனர். முதல் நாள், 85 பேருக்கும், நேற்று, 102 பேர் என மொத்தம், 187 தகுதியான பயனாளிகளுக்கு தையல் மெஷின் வழங்கப்பட்டது.
