/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.ஜி.எப்.ஐ., அணி தேர்வு 30ம் தேதி திருப்பூரில் நடக்கிறது
/
எஸ்.ஜி.எப்.ஐ., அணி தேர்வு 30ம் தேதி திருப்பூரில் நடக்கிறது
எஸ்.ஜி.எப்.ஐ., அணி தேர்வு 30ம் தேதி திருப்பூரில் நடக்கிறது
எஸ்.ஜி.எப்.ஐ., அணி தேர்வு 30ம் தேதி திருப்பூரில் நடக்கிறது
ADDED : செப் 27, 2024 11:27 PM
திருப்பூர்: இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், 68வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டி விரைவில் நடக்கவுள்ளது. இதற்கு முன்பாக மாநில அணிக்கான வீரர் தேர்வு போட்டி மாநிலம் முழுதும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், வரும், 30ம் தேதி, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த நத்தக்காடையூர் பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரியில், 17 வயது மாணவர், கூடைப்பந்து, கபடி அணித்தேர்வு நடக்கவுள்ளது. இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், உடற்கல்வி இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், 'மேட்'டில் நடக்கும் கபடி போட்டி, கூடைப்பந்து குறித்து ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. வீரர்களுடன் உடற்கல்வி ஆசிரியர் அல்லது பெற்றோர் பங்கேற்கலாம்; பயிற்சியாளர் பங்கேற்க அனுமதி இல்லை. போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள் முதல் நாள் இரவு, 9:30 மணிக்குள் அல்லது செப்., 30ம் தேதி காலை, 7:30 மணிக்கு கல்லுாரி மைதானத்துக்கு வந்து விட வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு பொறுப்பு ஆசிரியர் செந்திலதிபன் 99940 61629 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.