
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் கோபால்டு மில் பகுதியில் பாரதி நகரில் எழுந்தருளியுள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு பூஜை மற்றும் சக்தி அழைப்பு விழா நடந்தது.
நேற்று செல்வவிநாயகர் கோவிலில் இருந்து வீரக்குமாரர்களின் அலகு சேவையுடன் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் மஹாதளிகை பூஜை, பொது பொங்கல், அம்மன் சப்பரத்தில் புறப்பாடு ஆகியவை நடந்தன.
மாலையில் அம்பு சேவை, மகிஷாசூர சம்ஹாரம் செய்தல், சாந்தி பூஜை செய்து திருவீதி உலா வருதல் ஆகியவை நடந்தது.
இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. கோவில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.