/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாட்டு நலப்பணி திட்ட முகாமில் 'சக்தி விக்னேஷ்வரா' மாணவர்கள்
/
நாட்டு நலப்பணி திட்ட முகாமில் 'சக்தி விக்னேஷ்வரா' மாணவர்கள்
நாட்டு நலப்பணி திட்ட முகாமில் 'சக்தி விக்னேஷ்வரா' மாணவர்கள்
நாட்டு நலப்பணி திட்ட முகாமில் 'சக்தி விக்னேஷ்வரா' மாணவர்கள்
ADDED : அக் 04, 2025 11:19 PM

திருப்பூர்: திருப்பூர், பொங்குபாளையம், ஸ்ரீபுரத்தில் உள்ள சக்தி விக்னேஷ்வரா கல்வி நிலையம் சார்பில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொரவலுார் கிராமத்தில் ஏழு நாட்கள் நடந்தது. பிளஸ் 1 மாணவர்கள் 30 பேர் பங்கேற்றனர்.
கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் வழிகாட்டுதலின் பேரில், ஏரி, குட்டைகளில் 18 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன. அண்ணமார் கோவில், அரசு தொடக்கப்பள்ளி, ஊராட்சி அலுவலக வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டன. லோட்டஸ் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
போதைப்பொருட்கள், நெகிழி ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாலையில் நடத்தப்பட்டன.
தாளாளர் மயிலாவதி, முதல்வர் சக்தி வேலுசாமி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் முகாமை பார்வையிட்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.