ADDED : நவ 05, 2025 12:14 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில், 51 வது ஜூனியர் சிறுவர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி, திருப்பூர், காங்கயம் ரோடு, மாவட்ட கபடி கழக மைதானத்தில் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் போட்டிகளை துவக்கி வைத்தார்.
மாவட்டம் முழுதும் இருந்து, 47 அணிகளை சேர்ந்த, 600 வீரர்கள் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்றனர். லீக், காலிறுதி, அரையிறுதி என போட்டிகள் நடைபெற்றன. இறுதி போட்டியில் சண்முகா கபடிக்குழு அணி - டால்பின் கபடிக்குழு அணியை, 33 - 30 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, முதலிடம் பெற்றது. தமிழன் கபடிக்குழு மூன்றாமிடம், இளஞ்சிங்கம் கபடிக்குழு நான்காமிடம் பெற்றது.
முதலிடம் பெற்ற, சண்முகா கபடிக்குழுவுக்கு, 20 ஆயிரம் பரிசுத்தொகை, கோப்பை வ ழங்கப்பட்டது; காலிறுதி வரை முன்னேறிய அணிகளுக்கு 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. போட்டியின் நடுவர்களாக தண்டபாணி, பாண்டியன், மருதை, சிவ இளங்கோ, ஜெயசுதாகர் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற அணிக்கு, மாநில கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் உள்ளிட்ட மாவட்ட கபடி கழக நிர்வாகிகள் கோப்பை, பரிசுத் தொகை வழங்கினர்.

