/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் ஷண்முக சுப்ரமணியருக்கு புதிய தேர்
/
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் ஷண்முக சுப்ரமணியருக்கு புதிய தேர்
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் ஷண்முக சுப்ரமணியருக்கு புதிய தேர்
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் ஷண்முக சுப்ரமணியருக்கு புதிய தேர்
ADDED : பிப் 08, 2025 06:24 AM
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஷண்முக சுப்ரமணியருக்கு புதிய மரத்தேர் செய்ய, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் தேரோட்ட விழா, வைகாசி விசாகத்தின் போது நடைபெற்று வருகிறது.
முதல்நாள் விநாயகர் தேர் மற்றும் விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டமும், இரண்டாவது நாள் பெருமாள் தேரோட்டமும் நடைபெறும். முருகப்பெருமானுக்கு, கந்த சஷ்டி விழா உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக நடந்து வருகிறது.
தேரோட்டத்தின் போது, முருகப்பெருமான் தேர்வீதியுலா வர மரத்தேர் இல்லை. திருமுருகன்பூண்டி, அவிநாசியில் இருப்பது போல், முருகருக்கு தனியே தேர் செய்ய அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், ''ஷண்முக சுப்ரமணியருக்கு புதிய மரத்தேர் செய்ய ஹிந்து அறநிலையத்துறையில் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஸ்தபதிகளும், அதற்கான வரைபடங்களை தயார் செய்து கொடுத்துள்ளனர்.
தற்போதுள்ள தேர்களை காட்டிலும் சற்று சிறிய அளவில், பக்தர்கள் நன்கொடையில் முருகருக்கு தேர் வடிவமைக்கப்படும். விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்ட நாளில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் தேரோட்டமும் நடத்தப்படும்,'' என்றார்.