/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாந்தி வித்யாலயா 40ம் ஆண்டு விழா
/
சாந்தி வித்யாலயா 40ம் ஆண்டு விழா
ADDED : பிப் 06, 2025 02:14 AM

அவிநாசி: அவிநாசியில், 40 ஆண்டு காலமாக கல்வி பணியில் ஈடுபட்டு வரும் சாந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 'ஷான் விஸ்டா -2025' என்ற தலைப்பில், 40ம் ஆண்டு விழா, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தலைமையில் நடந்தது.
தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் தேவராஜன், விஞ்ஞானி நல்லசிவம், திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் நிர்வாகி கார்த்திகேயன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர்.
'பிளாக் ஷீப்' நிர்வாக இயக்குனர் விக்னேஷ் காந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ரேணுகாதேவி மோகன்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.