ADDED : அக் 26, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: நடமாட முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவரை, நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையினர் மீட்டு, காப்பகத்தில் தங்க வைத்தனர்.
அவிநாசி புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நடமாட முடியாத நிலையில், ஆதரவற்ற முதியவர் பரிதவிப்பதாக, நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளைக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை பஸ் ஸ்டாண்ட்டுக்கு சென்ற அறக்கட்டளை குழுவினர், முதியவரை விசாரித்தனர்.
திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி, 70 என்பதும், மனைவி இறந்துவிட்ட நிலையில், மகன் தன்னை பராமரிக்காமல் விரட்டிவிட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து, அவரை மீட்டுச்சென்று முதலுதவி செய்தனர்; போலீசார் அனுமதியுடன், போத்தம்பாளையத்தில் உள்ள நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தனர்.

