/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதியவருக்கு அடைக்கலம்; அறக்கட்டளையினர் சேவை
/
முதியவருக்கு அடைக்கலம்; அறக்கட்டளையினர் சேவை
ADDED : செப் 07, 2025 10:38 PM
திருப்பூர்; திருப்பூர், 15 வேலம்பாளையம் அருமைக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த காளிமுத்து, 65 என்பவர், வாட்ச்மேனாக பணிபுரிந்துவந்தார்.
இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி இறந்து 22 ஆண்டுகள் ஆயின. ஆறு மாதங்கள் முன் ஏற்பட்ட விபத்தால், காளிமுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டார்; சர்க்கரை நோய் காரணமாக கால் விரல் நீக்கப்பட்டது. வேலைக்குச் செல்ல முடியவில்லை. அவருக்கு உதவுமாறு, மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையினர், 15 வேலம்பாளையம் போலீசாரிடம் தெரிவித்தனர். காளிமுத்துவை, போத்தம்பாளையத்தில் செயல்பட்டு வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையினர், போலீசாரின் அனுமதி பெற்று மீட்டனர்.
'காளிமுத்துவுக்கு எங்கள் அறக்கட்டளையில் அடைக்கலம் தந்து உதவியுள்ளோம்' என்று அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ் கூறினார்.