ADDED : டிச 14, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி அறிக்கை:
வணிக கட்டடங்களுக்கான வாடகைக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., என்பது, வணிகர்களின் குரல்வளை நசுக்கி, வணிகத் தொழிலை அழிக்கும் செயல். திருப்பூர் மாநகராட்சியின் அநியாய வரி உயர்வு சாமானிய மக்கள் முதல், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
இதைக் கண்டித்து, அனைத்து வியாபார சங்கங்களின் பேரவை மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில், வரும், 18ம் தேதி நடத்தப்பட இருக்கிற கடையடைப்பு மற்றும் தொடர் போராட்டத்துக்கு வி.சி.க., முழு ஆதரவு வழங்கும்.